ரொறண்டோ இதனைச் செய்ய வேண்டாம் : எச்சரிக்கும் வைத்தியர்

ரொறண்டோவில் உள்ள கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது ஆபத்தானது என ரொறண்டோவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Eileen De Villa எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்று மிகக் குறைந்த அளவில் காணப்படும் பிராந்தியங்களில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது அடையாளம் காணப்பட்டுவரும் புதியதும் மேலும் வீரியத்துடன் பரவுக் கூடியதுமான வைரஸ்சானதுஇ புதிய தொற்றுப் பரவலை ஏற்படுத்துவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக Eileen De Villa எச்சரித்துள்ளார்.

கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு காலஅவகாசம் ஒன்று தேவை என்ற போதிலும் ரொறண்டோவை பொறுத்தவரை அந்த நேரம் இதுவரை வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் பரவும் விகாரமடைந்த வைரஸ்சானது முதலில் ரொறண்டோவேிலேயே கண்டறியப்பட்டிருந்தது.

அத்துடன் தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட விகாரமடைந்த வைரஸ் தொற்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த மூன்று வைரஸ் தொற்றுக்களும் சமூகத்தில் பரவும் பட்சத்தில் அவை மிக வேகமாக மக்கள் மத்தியில் பரவி விடும் என வைத்தியர் Eileen De Villa சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்று அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ள ரொறண்டோஇ பீல் பிராந்தியம் மற்றும் யோர்க் பிராந்தியங்களில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்ற உத்தரவை தளர்த்துவதற்கு மாகாண அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அவசர நிலைமை பிரகடனம் எதிர்வரும் செவ்வாய்கிழமையுடன் காலாவதியாகும் நிலையில்இ படிப்படியாக வழமையான செயற்பாடுகளை ஆரம்பிக்கவும் மாகாண அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தும் விடயத்தில் முன் எச்சரிக்கையுடன் அணுக வேண்டியதன் முக்கியத்துவத்தை வைத்தியர் Eileen De Villa வலியுறுத்தியுள்ளார்.