சுற்றுலா பயணத்தில் ஈடுபட்ட உள்ளூர்வாசிகள் 16 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பலப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் ஆதாதொல, வத்துகெதர, ரன்தொம்பே மற்றும் கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். வெலிகம பிரதேசத்தை சேர்ந்த நபரும் இந்த சுற்றுலா பயணத்துடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
வெலிகம பிரதேச நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் மூலம் சுற்றுலா பயணத்தில் ஈடுபட்ட 16 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.