இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தொடர்பான பீசீஆர் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளன. பெப்ரவரி 2ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி சுற்றுலாப்பயணிகள் 14 நாட்கள் தங்கியிருந்தால், இதுவரைக்காலமும் மேற்கொள்ளப்பட்ட மூன்று பீசீஆர் பரிசோதனைகள் இரண்டாக குறைக்கப்பட்டுள்ளன.
இதற்கு அமைய இலங்கைக்கு வரும்போது வானூர்தி தளத்திலும் பின்னர் தங்கியிருக்கும் விருந்தகத்திலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.