இலங்கையில் இருந்து செல்வோருக்கு பஹ்ரேன் முற்றுமுழுதாக தடைசெய்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட சிவப்பு பட்டியலில் இலங்கையையும் பஹ்ரேன் உள்ளடக்கியுள்ளது.
இலங்கையை தவிர இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து செல்வோருக்கும் பஹ்ரேன் தடைவிதித்துள்ளது.
பஹ்ரேன் பிரஜைகள் மற்றும் வதிவுரிமை வீசா அனுமதி பெற்றவர்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு பஹ்ரேன் அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது.
இதன்பிரகாரம் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் கொரோனா தொற்றை உறுதி செய்யும் பீ.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், நாட்டை வந்தடைந்த பின்னர் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் பஹ்ரேன் அரசாங்கம் அறிவித்துள்ளது.