இலங்கையில் முதல் முறையாக தெரிவுசெய்யப்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இராணுவ கட்டளைத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்
பொதுமக்களுடன் நெருக்கமான தொடர்புகளை பேணுவோர் மற்றும் தொற்றினால் அதிக ஆபத்தை எதிர்கொள்பவர்கள் என அடையாளம் காணப்படும் நபர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.