கொவிட் 19 தடுப்பூசிக்கு அஞ்சாத அமைச்சர்

இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஐந்து இலட்சம் அஸ்ராசெனகா தடுப்பூசிகள் நாடாவிய ரீதியில் வழங்கப்பட்டுவருகின்றன.

அந்த வகையில் முதல் கட்டமாக இலங்கையில் உள்ள வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் என சுகாதார துறையில் உள்ளவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகின்றன.

 

 

 

 

அடுத்த கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தொழில்படையில் இருக்கும் 30 தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

அந்த வகையில் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் சி.பி.ரத்நாயக்க, கொவிட் 19 வைரஸ்சிற்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளார்.

கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் அவருக்கு நேற்று புதன்கிழமை இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் கொவிட் 19 தொற்று நோயாளர்களுடன் நேரடி தொடர்புகளைப் பேணியமை தொடர்பில் சி.பி.ரத்நாயக்க தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

எனினும் பீ.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னர் அவருக்கு தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், நேற்று கொவிட் 19 வைரஸ்சிற்கு எதிரான தடுப்பூசியையும் அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.