அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான இரண்டாவது குற்றவியல் வழக்கு விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது.
துரிதமாக இந்த வழக்கை விசாரணை செய்வதற்கான கால அட்டவணை தொடர்பில் செனட் சபைத் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ள நிலையில்இ இந்த விசாரணைகள் ஆரம்பமாகின்றன.
கடந்த ஜனவரி மாதம் 06 ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடம் மீதான வன்முறைமிக்க முற்றுகையை தூண்டினார் என டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் குற்றமிழைத்தமைக்கு அளவுக்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளதாக ஜனநாயக கட்சியினர் கூறியுள்ள போதிலும் முற்றுகையில் ஈடுபட்டவர்கள் சுயாதீனமாக செயற்பட்டதாக டொனால்ட் ட்ரம்பின் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.
அத்துடன் இந்த வழக்கு விசாரணையானது அபத்தமானது எனவும் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் இரண்டு தடவைகள் குற்றவியல் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒரே ஒரு ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதிவாகியுள்ளார்.
அத்துடன் டொனால்ட் ட்ரம்பைத் தவிர மேலும் இருவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.