கனடாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
இதன்மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 835 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் மேலும் 2 ஆயிரத்து 960 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 08 ஆயிரத்து 124 பேராக உயர்வடைந்துள்ளது.
எனினும் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 07 இலட்சத்து 45 ஆயிரத்து 404 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இதுவரை 10 இலட்சத்து 98 ஆயிரத்து 458 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக கனேடிய சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இறுதியாக ஒன்ராரியோவில் மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்து 265 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
கியூபெக் மாகாணத்திலும் 853 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
சஸ்காஜ்ஜுவனில் 171 பேரும் மனிட்டோபாவில் 52 பேரும் அட்லாண்டிக் கனடாவில் 14 பேரும் புதிததாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
கனடாவின் மேற்கு பிராந்தியத்தில் 612 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அல்பேர்ட்டாவில் 269 பேரும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் 343 பேரும் கொரோனா தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.