லஞ்சம் வாங்கிய அரசாங்க உத்தியோகத்தர்கள் 60 பேர் கடந்த 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டதாக லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பத்மினி வீரசூரிய நேற்று தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களில் அதிபர்கள், வனவிலங்கு அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், மோட்டார் வாகனத் துறை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு சேவைகளை வழங்க அரச நிறுவனங்களின் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் 1954 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.